நகம் உடைவதற்கான பொதுவான காரணங்கள் (Brittle nails often occur due to):
* நீண்ட காலமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துவது, துணிகளைத் துவைக்கும்போது கடினமான டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு.
* நகங்களை நீளமாக்கவும் சுருக்கவும் அடிக்கடி நகங்களை நனைத்து ஊறவைப்பது. இதனால் நகங்கள் உடையும் தன்மையை அடைந்து, மென்மையாக மாறிவிடும், அளவுக்கு அதிகமான ஈரப்பதத்தால் எளிதில் உரிந்து வந்துவிடும்படி மாறிவிடவும் வாய்ப்புள்ளது.
* நெயில் பாலிஷ் ரிமூவர் (அசிட்டோன்), சுத்தப்படுத்தும் திரவங்கள் போன்றவற்றால் வேதிப்பொருள்கள் நகத்தை பாதிப்பது.
* அரிதாக இரும்புச்சத்துப் பற்றாக்குறை, உடலில் உள்ள ஏதேனும் நோய் அல்லது பூஞ்சை நோய்த்தொற்று போன்றவை.
* தைராய்டு பிரச்சனை, குறை பிட்யூட்டரி செயல்பாடு, நீரிழிவுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலாசியா போன்ற நாளமிலா சுரப்பு வளர்சிதை மாற்றக் கோளாறுகள்.
உடையும் தன்மை கொண்ட நகங்களைச் சமாளித்தல்
* பாத்திரங்கள் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளைச் செய்யும்போது, இரப்பரால் ஆன கையுறைகளை அணிந்துகொள்ளவும்.
* கைகளை அடிக்கடி ஈரமாக்குவதைத் தவிர்க்கவும், சோப்பு அல்லது டிடர்ஜென்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது குறைந்த அளவே பயன்படுத்தவும். இதனால் அவற்றால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கலாம்.
* பாத்திரம் கழுவியபிறகு, கைகளை நன்கு உலர்த்தி, லோஷன் அல்லது மென்மையான கிரீமை நகங்கள் மற்றும் விரல் முனைகளில் தேய்த்துக்கொள்ளவும்.
* நெயில் பாலிஷை முறையாக, சரியான விதத்தில் பயன்படுத்தினால் அது நகங்களின் பரப்பைப் பாதுகாக்கும்.
* அக்ரிலிக் பெயின்ட், ஒட்டக்கூடிய நகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு உடையக்கூடிய நகங்கள் இருந்தால் கண்டிப்பாக இவற்றைத் தவிர்க்கவும்.
* நகங்களை கரடுமுரடாகக் கையாள வேண்டாம். நகங்களின் முனைகளின் வடிவத்தை சீராக்க, உலோகமல்லாத உபகரணத்தைப் பயன்படுத்தவும், வட்ட வடிவில் மெதுவாகப் பயன்படுத்தவும்.