கத்திரிக்காய் - 5 பெரியது
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள்
குழம்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் பெருங்காயத்தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!