ஆரோக்கியம்

பார்லி - பச்சை பயறு பொங்கல்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் பார்லிவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பார்லியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

பார்லி - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை பயறு - அரை கப்

தாளிக்க :

சீரகம்
எண்ணெய்
கறிவேப்பிலை
மிளகு
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை :

முதலில் பார்லி மற்றும் பச்சைபயறை சுத்தம் செய்து கொள்ளவும்.

இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பார்லியை கழுவி அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பார்லி நன்றாக ஊறியதும் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பயிறை சேர்த்து உப்பு போட்டு 30 நிமிடங்கள் குக்கரில் வேக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு, இஞ்சியை சேர்த்து தாளித்து பொங்கலுடன் கொட்டி கிளறவும்.

ஆரோக்கியமான பார்லி - பச்சை பயறு பொங்கல் தயார்.

இதற்கு எல்லாவித சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.