தக்காளி - 2
அவகோடா - 2
வெங்காயம் - 2
வெள்ளரிக்காய் - 1
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் - 1
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை :
அவகோடாவின் கொட்டையை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய அவகோடா, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன் [பாட்டி மசாலா] மிளகு தூள், வினிகர், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக எலுமிச்சம் பழச்சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் ஊறவைத்து பரிமாறவும்.
சூப்பரான அவகோடா - வெள்ளரிக்காய் சாலட் ரெடி.