தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 300 கிராம்
சிறிய உருளைக்கிழங்கு (பேபி பொட்டேட்டோ) - 200 கிராம்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
சீரகம் - அரை டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
அன்னாசிப்பூ - 1
தயிர் - 200 மில்லி
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
எலுமிச்சைப்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 4
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
குங்குமப்பூவை 1 டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
சிறிய உருளைக்கிழங்கை (பேபி பொட்டேட்டோ) வேக வைத்து தோல் நீக்கி வைக்கவும்.
பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற விடவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, தயிர், உருளைக்கிழங்கு, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அனைத்து நன்றாக வதங்கியதும் ஊற வைத்து வடிகட்டிய அரிசியை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு முக்கால் பதம் வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து குங்குமப்பூ ஊறிய பாலை ஊற்றி, மூடி போட்டு அதன் மேல் கனமான பொருள் அல்லது பாத்திரத்தில் தண்ணீரை வைத்து இருபது நிமிடம் வேக விடவும்.
15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய் ஊற்றி ஒரு மெதுவாக கிளறி இறக்கிப் பரிமாறவும்.
சூப்பரான ஆலூ ‘தம்’ பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.