ஆரோக்கியம்

விவாகரத்தான பெண்களுக்கான ஆலோசனை

ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது? என்று கேட்கும் பெண்களுக்கான ஆலோசனையை இங்கே பார்க்கலாம்.

மாலை மலர்

பெண்கள் இதை பற்றி எல்லாம் கவலை கொள்லாமல் தங்களுடை எதிர்காலத்தில் மட்டும் மனதில் நினைத்து முன்னேற வேண்டும்.

விவாகரத்தான பெண்கள் முதலில் குடும்ப உறவுகளை மேம்படுத்தவேண்டும். குடும்ப உறவுகள் மேம்பாடு அடையும்போது ஓரளவு மகிழ்ச்சி நிரந்தரமாகும். அதன் பின்பு அவர்கள் சமூக உறவை மேம்படுத்த வேண்டும்.

சமூக உறவை நீங்கள்தான் வளர்க்கவேண்டும். அதற்கு ஆரோக்கியமான சிந்தனையும், மகிழ்ச்சியும், புன்னகையும், தைரியமும் அவசியம்.

உங்களுடைய பழைய சோக கதைகளை கேட்க யாருமே விரும்ப மாட்டார்கள். உங்களை சுற்றியிருக்கும் சமூகத்துக்கு உங்களால் முடிந்த நன்மைகளை செய்து அவர்களை அனுசரித்து நடந்தால் அது ஒரு நல்ல சூழலை உங்களுக்கு ஏற்படுத்தி தரும். அதன் மூலம் உங்கள் மனதில் இருக்கும் வெறுமை அகலும்.