கரூர்:
கரூர் கோவை சாலையில் உள்ள தலைமை பொறியாளர் மண்டல அலுவலகம் முன், மின் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மின் திட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். போராட்டத்தில் புயல் பாதிப்புகளின் போது, இரவு, பகலாக பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்தபடி தினக்கூலி, 380 ரூபாய் வழங்க வேண்டும். பல ஆண்டுகள் பணி புரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை காலி பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை கைது செய்தனர்.