ஆசிரியர் தேர்வு

லாரி மீது தாக்குதல் நடத்திய 3 சிறுவர்கள் கைது

லாரி மீது தாக்குதல் நடத்திய 3 சிறுவர்கள் கைது செய்யபட்டனர் குடிபோதையில் இருந்த மூவரும் திடீரென லாரியை வழிமறித்து நிறுத்தினர்

கரூர்:

கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது49) டிரைவர். இவர் கரூர் அருகே வடக்குபாளையம் பகுதியில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த 3 சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் லாரியின் பின்னால் சென்றுள்ளனர். குடிபோதையில் இருந்த மூவரும் திடீரென லாரியை வழிமறித்து நிறுத்தினர். தொடர்ந்து வெங்கடாசலத்தை தாக்கி லாரியின் கண்ணாடியையும் உடைத்தனர். இது குறித்து வெங்கடாசலம், பசுபதிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT