ஸ்ரீஜா அகுலா, சரத் கமல்  
காமன்வெல்த்-2022

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா

இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

மாலை மலர்

பர்மிங்காம்:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.