சினிமா

”வாழா என் வாழ்வை வாழவே” - ரீ ரிலீஸ் ஆகிறது 96!

பிரேம் குமார் இயக்கத்தில், கோவிந்த வசந்த் இசையில் 2018 ஆம் ஆண்டு 96 திரைப்படம் வெளியானது.

96 திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்தததை கொண்டாடும் விதமாக மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

8 ஆண்டுகளை நிறைவு செய்த 96

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த திரைப்படம் 96. இத்திரைப்படம் வெளியாகி அக்டோபர் 4 உடன் வெற்றிகரமாக 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சி. பிரேம் குமார் இயக்கத்தில், கோவிந்த வசந்த் இசையில் 2018 ஆம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது.

காதலை மையமாக கொண்ட கதைகளம்

பள்ளியில் படிக்கும் இரு காதலித்த ராமச்சந்திரன் மற்றும் ஜானகிதேவி ஆகியோரிடையே இருந்த காதல், எதிர்பாராத சூழ்நிலைகளால் பிரிகிறது. மீண்டும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி நண்பர்கள் சந்திப்பினால் இருவரும் மீண்டும் சந்திக்க நேரிடுகிறது. ஒரே ஒரு இரவில் இருவரும் தங்கள் கடந்த கால நினைவுகளைப் பேசி, பிரிய வேண்டிய சூழலில் இத்திரைப்படம் அமைக்கிறது, குறிப்பாக ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துகொண்டு இர்றுதியில் பிரியும் வகையில் கதைகளமானது அமையும்.

திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீஸ்

இந்த நிலையில் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து, மீண்டும் திரையரங்குகளில் வரும் அக்டோபர் 9 ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

உற்சாகத்தில் ரசிகர்கள்

திரைப்படம் வெளியான நாள் முதல் திரைப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பு ர்சிகர்களிடயே பெரும் வரம்வேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT