சினிமா

எக்ஸ் வீடியோஸ்

கலர் ஷேடோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வளர்ந்துள்ள படம் `எக்ஸ் வீடியோஸ்'. இந்த படத்தில் நாயகர்களாக அபிநவ், நிஜய் நாயகியாக ஆஹிருதிசிங், இவர்களுடன் அஜய்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

மாலை மலர்

கலர் ஷேடோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வளர்ந்துள்ள படம் `எக்ஸ் வீடியோஸ்'. இந்த படத்தில் நாயகர்களாக அபிநவ், நிஜய் நாயகியாக ஆஹிருதிசிங், இவர்களுடன் அஜய்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இயக்கம்-சஜோ சுந்தர் படம் பற்றி கூறிய அவர்... "நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில் நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண் காணிக்க முடியும்.

என் நண்பர் ஒருவர் எனக்கு, தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ. அது என்னை அதிர வைத்தது மட்டுமல்ல அது பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவும் வைத்தது. அது தான் இந்த படத்துக்கு காரணம் இது ஆபாசமான படமல்ல. ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம். இதைத்தமிழிலும், இந்தியிலும் எடுத்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் எனக்கு லாபம் வந்தால் அதில் பெரும் பகுதியை அரசுப் பள்ளிகளுக்குக் கழிப்பறை கட்டப் பயன்படுத்துவேன்'' என்றார்.