இப்படத்தில் விஜய் டீக்கடை நடத்தி தம்பி ஜெய்யை படிக்க வைப்பார். ஜெய், காதல் விவகாரத்தில் கொல்லப்படுவார். ஜெய்யின் அறிமுகப் படமான பகவதியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், அறிமுகமே விஜய்யின் தம்பி என்பதில் சிறப்புதான்.
இந்நிலையில் ஜெய் தனது டுவிட்டர் பக்கத்தில், 'எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஜெய்.
என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை' என விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெய்.