சினிமா

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா?

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ஆத்மிகாவை தொடர்ந்து தற்போது மற்றொரு ஹீரோயினை பெயர் அடிப்பட்டு வருகிறது.

மாலை மலர்

அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா, 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார்.

இந்த படத்தில் இளமை தோற்றத்தில் அஜித் நடிக்கிறார், வடசென்னை தாதாவாக வருகிறார், என்று தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும், இது பற்றி இயக்குனர் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடி கீர்த்திசுரேஷ் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து ஆத்மிகா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லை.

இப்போது, அஜித் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடிக்கப் போவதாகவும், இதுபற்றி பேச்சுவார்த்தை நடப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. படத்தயாரிப்பு தரப்பிலோ, இயக்குனர் மூலமோ எதுவும் சொல்லப்படாத நிலையில் இது போன்ற தகவல்கள் வெளியாவது எப்படி? என்று அஜித் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.