சினிமா

`விழித்திரு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்தார்த், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் `விழித்திரு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.

தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரியில் ரிலீசாக இருந்தது. ஆனால் சில பிரச்சனைகளால் படம் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'விழித்திரு' படம் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் கூறும் போது,

இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள 'சவுந்தர்யன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான சுவாரஸ்யமாக, தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.

SCROLL FOR NEXT