நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார்.
இந்நிலையில், அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் கமல்ஹாசனுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக்கும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,
`இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள்' என்று கூறியிருக்கிறார். #KamalHaasanPartyLaunch