சினிமா

இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள், பெற்றோர் கவனிக்க - விவேக் டுவீட்

கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உடனே மரண தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும் என்று நடிகர் விவேக் கூறியிருக்கிறார். #JusticeForHasifa

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் சிறுமி ஒருவர் சிறைவைக்கப்பட்டு கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றிய தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவங்களுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, வன்கொடுமை தடுப்புக்கு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விவேக் அவரது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 

`குழந்தை பலாத்காரம் தொடர்கதையா? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று. உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும். இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள், அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம். பெற்றோர் கவனிக்க!'

இவ்வாறு கூறியிருக்கிறார். #JusticeForHasifa #Unnaocase #Vivekh

SCROLL FOR NEXT