சினிமா

உலக அளவில் புதிய சாதனை படைத்த ‘விவேகம்’ டீசர்

சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் ‘விவேகம்’ படத்தின் டீசர் உலக அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

மாலை மலர்

சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில் விவேகம் படத்தின் டீசர் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

உலக அளவில் ‘யு’ டியூப் லைக்களில் இரண்டாவது இடத்தில் உள்ள டீசர் மார்க்வெல்லின் ‘அவஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்’ இந்த டீசர் வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இதற்கு இதுவரை 8 கோடி பார்வையாளர்களும், 5 லட்சத்து 24 ஆயிரத்து 32 லைக்குகளும் கிடைத்துள்ளன.

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசர் வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஒரு கோடியே 9 லட்சம் பார்வையாளர்களும், 5 லட்சத்து 27 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் குறுகிய காலத்தில் உலக அளவில் அதிக சாதனை படைத்து முதல் இடம் பிடித்த டீசர் இது என்ற பெருமையை ‘விவேகம்’ படைத்திருக்கிறது. முதல் இடத்தில் 'ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடி' படத்திற்கு 5 லட்சத்து 66 ஆயிரம் லைக்குகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.