சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
நாளை மறுநாள் படம் வெளியாக இருப்பதால் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் விவேகம் ரிலீஸை அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். விவேகம் படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்' படத்தின் டீசரும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை `வேலைக்காரன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.