கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வயதிலும் சிறப்புடன் சண்டைப் போடும் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan