சினிமா

விஸ்வரூபம் 2 படத்தின் சென்சார் ரிசல்ட்

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. #Kamal #Viswaroopam2

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனே இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே ரெடியாக இருக்கும் நிலையில், தற்போது சென்சார் ரிசல்ட் வந்துள்ளதால், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Kamal #Viswaroopam2

SCROLL FOR NEXT