சினிமா

கவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் அவர் ஒப்பந்தமாகி இருந்த கவுதம் மேனன் படத்தில் இருந்து தற்போது விலகியிருக்கிறார்.

`வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். 

10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவரது நடிப்பில் கடைசியாக `கதாநாயகன்' படம் வெளியானது. இவர் தற்போது `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சஸன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

அதேபோல் கவுதம் மேனன் தயாரிப்பில் `பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இருந்து விலகுவதாக விஷ்ணு விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தேதி பிரச்சனையால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் விளக்கம் அளித்திருக்கிறார். 

செந்தில் வீராசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கவிருந்த அந்த படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

மேலும் `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்திற்கு பிறகு, எழில் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கி இருப்பதாகவும், விஷ்ணு விஷால் அறிவித்திருக்கிறார். 

SCROLL FOR NEXT