இதையடுத்து விஷ்ணு விஷால் - எழில் - டி.இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை ஈஷான் புரொடக்ஷன் சார்பில் துஷ்யந்த்.ஆர்.ஜி மற்றும் அபிராமி துஷ்யந்த் தயாரிக்கின்றனர்.
யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் தற்போது `பொன் ஒன்று கண்டேன்', `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சஸன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.