சினிமா

விஷ்ணு வர்தனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான விஷ்ணு வர்தன் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #VishnuVardhan #VikramBatraBiopic

`குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணு வர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களையும் இயக்கினார். கடைசியாக `யட்சன்' படத்தை இயக்கியிருந்தார். 

இவ்வாறு தமிழில் பேசும்படியான படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன் மூன்று வருட இடைவேளைக்குப் பிறகு இந்தியில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார்.

கார்கில் போரின் போது உயிர்த் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாக இருப்பதாகவும்,  அதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரன் ஜோஹர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். சந்தீப் ஸ்ரீவத்சவா இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார். #VishnuVardhan #VikramBatraBiopic

SCROLL FOR NEXT