சினிமா

கோலி சோடாவின் இரண்டாவது மூடியை ஓபன் பண்ணும் விஷால்

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோலிசோடா 2’ படத்தின் இரண்டாவது மூடியை ஓபன் பண்ண இருக்கிறார் நடிகர் விஷால். #GoliSoda2

ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கோலிசோடா-2’. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல், பொண்டாட்டி என்ற சிங்கிள் டிராக்கும் வரவேற்பு பெற்றது. அடுத்ததாக கெளம்பு என்ற இரண்டாவது டிராக்கை நடிகர் விஷால் நாளை வெளியிட இருக்கிறார்.

அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.