சினிமா

கமல் வழியில் விஷால், வரலட்சுமி, பிரசன்னா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருக்கும் விஷால், வரலட்சுமி, பிரசன்னா ஆகியோர் கமல் வழியை பின்பற்றி வருகிறார்கள். #Kamal

கமல்ஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கும்போதே டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார்.

அவர் வழியில் தற்போது விஷால் ஒரு தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அடுத்து கமல், விஷால் வரிசையில் வரலட்சுமியும் இணைந்துள்ளார். அவரும் ஒரு டிவியில் சமூக சேவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.

நடிகர் பிரசன்னாவும் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயன், மாகாபா.ஆனந்த், ரோபோ சங்கர் என டிவியில் இருந்து சினிமாவுக்கு ஆட்கள் வந்த நிலைமை மாறி சினிமாவில் இருந்து பிரபலங்கள் டிவி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.