நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் தற்போது `இரும்புத்திரை', `சண்டக்கோழி-2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சண்டக்கோழி படப்பிடிப்பின் போது விஷாலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் டெல்லி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைவலி மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்காக விஷால் அமெரிக்கா சென்றிருப்பதாகவும், அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 10 நாளில் சென்னை திரும்புவார் என்று செய்திகள் வெளியானது.
இதற்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் வெளியாகின. என் உடல் நலம் ஆரோக்கியத்துடன் உள்ளதை எனது நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஒத்தை தலைவலிக்காக சில நாட்கள் ஓய்வு எடுக்கச் சென்றுள்ளதாகவும், ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் திரும்புவேன் என்றும் பதிவு செய்துள்ளார்.