சினிமா

வருமானவரித் துறை அலுவலகத்தில் 27ம் தேதி ஆஜராக விஷாலுக்கு உத்தரவு

நடிகர் விஷால் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக, வரும் 27ம் தேதி வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது விஷால், மற்றும் மேலாளர்கள் யாரும் இல்லை.

இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) சென்னை வருமானவரித் துறை அலுவலத்தில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவு விடுத்துள்ளனர். வரிப் பிடித்தம் செய்ததில் ரூ.51 லட்சம் வரை அரசுக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு தயாரிப்பு நிறுவன வங்கி கணக்கு புத்தகத்துடன் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, தன்னுடைய அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெற்றிருந்தால் அதனையும் சந்திக்க தயார் என்று விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.