சினிமா

மீண்டும் தள்ளிப்போகும்`வேலையில்லா பட்டதாரி 2' ரிலீஸ்

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் - கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். படத்தின் பாடல்கள், டிரைலர், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போகிறது.

முன்னதாக படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருந்த `விவேகம்' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

இதையடுத்து நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரகுவரன் வர்றான் டீசருடன், `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் அறிவித்திருக்கிறார்.