சினிமா

விக்ரம் நடிக்கும் மகாவீர் கர்ணா படத்தின் முக்கிய அப்டேட்

விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MahaveerKarna #Vikram

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. வசூலிலும் சாதனை படைத்தன.

இதை தொடர்ந்து சரித்திர படங்களை பிரமாண்டமாக தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது, தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கும் ‘சைரா’ படம் வளர்ந்து வருகிறது. இது தவிர மகாபாரத கதை மலையாளம், இந்தியில் ரூ.1000 கோடி செலவில் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், விக்ரம் நடிக்க இருக்கும் ‘மகாவீர் கர்ணா’ படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் விமல் இதற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றை உருவாக்கி இருக்கிறார். இது ரூ.300 கோடி செலவில் தமிழ், இந்தியில் தயாராகிறது.

அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் - நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு, மலையாளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் இயக்குனர் விமல் சமீபத்தில் சபரிமலை சென்றார். அப்போது அய்யப்பன் கோவிலில் இந்த படத்தின் கதை, திரைக்கதையை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MahaveerKarna #Vikram