சினிமா

விக்ரம் மகளுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணம் நடைபெற்றது

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி, தனது இல்லத்தில் நடத்தி வைத்தார்.

இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர்.