அதே நேரத்தில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
அதன்படி அந்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்கு துப்பாக்கி முனை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ராஸ்மதி ஒளிப்பதிவு செய்ய, நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.