ஸ்ரீராம், விஜய் 
சினிமா

பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இவர்தானாம்

அட்லீ இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

இப்படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸ்ஸில் எடுக்கப்பட்டாலும், ஒரு சில காட்சிகளில் விஜய்யின் பிகில் கேரக்டருக்கு டூப் போட்டு தான் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இளம் நடிகர் ஸ்ரீராம் என்பவர் தான் விஜய்க்கு டூப்பாக நடித்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பிகில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களையும் ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.