சினிமா

பார்த்திபன் மகளுக்கு நடிகர் விஜய் நேரில் வாழ்த்து

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு அவரது காதலரும், ஸ்ரீகர் பிரசாத்தின் மகனுமான அக்‌ஷய்யுடன் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், நடிகர் விஜய் கீர்த்தனா - அக்ஷய் தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #KeerthanaWedsAkshay

நட்சத்திர தம்பதிகளான பார்த்திபன் - சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல தேசிய விருது படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. 

இவர்களது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலரும் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் விஜய் குடும்பத்தில் இருந்து விஜய்யின் பெற்றோர் திருமணத்தில் பங்கேற்றனர்.  படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகர் விஜய் திருமணத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், நேற்று கீர்த்தனா - அக்‌ஷய் தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்து விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்யின் திடீர் பிரவேசம் கீர்த்தனா - அக்‌ஷய்க்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம். இந்த சந்திப்பின் போது பார்த்திபன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். #KeerthanaWedsAkshay #KeerthanaMarriage