சினிமா

நவம்பரில் விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ்

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் என்னவென்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை வாங்க வணிக ரீதியாக கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இப்படத்தை '7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' தயாரிக்கிறது. 'அம்மே நாராயணா என்டர்டெயின்மெண்ட்' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.