சினிமா

இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம்

லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருதை வென்றுள்ளது. #VijaySethupathi #MerkuThodarchiMalai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார். பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், பார்வையாளர் மற்றும் நடுவர் குழுவின் சார்பாக சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. 

திரைக்கு வரும் முன்பே பல்வேறு திரைப்பட விழாவில் பங்கேற்று அதில் விருதுகளுக்கும் படம் தேர்வாகி இருப்பது படக்குழுவினருக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதிக்கு இந்த படம் சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது. 

விஜய் சேதுபதி தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜுங்கா படத்தை தயாரித்து வருகிறார். #VijaySethupathi #MerkuThodarchiMalai #ToulouseIndianFilmFestival

SCROLL FOR NEXT