சினிமா

ரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி விரைவில் இணைவதற்காக மற்ற பட வேலைகளை முடித்து வருகிறார். #VijaySethupathi #Rajini

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.

விஜய்சேதுபதி தான் பங்கேற்கும் காட்சிகளுக்காக விரைவில் படக்குழுவில் இணைய உள்ளார். இதற்காகவே இந்த மாத இறுதியில் வெளியாகும் ஜுங்கா படத்தின் புரமோ‌ஷன்களை இப்போதே தொடங்கி இருக்கிறார்.

அவர் நடிக்கும் மற்ற படங்களான சீதக்காதி மற்றும் 96 படங்களின் விளம்பர வேலைகளும் தொடங்கி விட்டன. இவை தவிர விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு கணவராக சில காட்சிகள் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்துக்கும் புரமோ‌ஷன் தொடங்கி உள்ளது.

இன்னும் சில நாட்கள் இந்த படங்களின் விளம்பர வேலைகளை முடித்துவிட்டு ரஜினி பட டீமுடன் சேர இருக்கிறார். ஒரே நேரத்தில் ஒரு நடிகரின் 4 படங்கள் விளம்பரப்படுத்தப்படுவது சமீபகாலங்களில் எந்த கதாநாயகருக்கும் நடக்காதது.

SCROLL FOR NEXT