சினிமா

சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதி

ராம் சரண் தயாரிப்பில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

மாலை மலர்

‘சைரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, கிச்சா சுதீப், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்கின்றார்.


சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அடங்கிய டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் சற்றுமுன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.