லோகேஷ் கனகராஜ் - விஜய் சேதுபதி 
சினிமா

மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய்சேதுபதி

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ’மாநகரம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. 

தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ’மாஸ்டர்’ படத்தில் வில்லனாகவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தின் டைட்டில் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.