சினிமா

உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `இப்படை வெல்லும்' படத்தில் விஜய் சேதுபதியும் இடம் பெற்றிருக்கிறார்.

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார். அதாவது, படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும் தகவலின்படி, விஜய் சேதுபதி இந்த படத்திற்காக பின்னணி வர்ணனை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ராஜு மகாலிங்கம் தயாரித்துள்ளார்.