சினிமா

தங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் உதவி - ரசிகர் மன்றம் மூலம் வழங்கினார்

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றம் மூலம் ரூ.5 லட்சம் வழங்கினார். #GomathiMarimuthu #VijaySethupathi

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிகின்றன.

கோமதி கடும் வறுமையை மீறி வென்றவர் என்ற செய்தி வெளியான பிறகு அரசியல் கட்சிகளும் பிரபலங்களும் போட்டி போட்டு உதவி செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி கோமதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

திருச்சி முடிகண்டம் பகுதியில் கோமதி வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் மற்றும் முக்கிய மாவட்ட தலைவர்கள் கோமதியை சந்தித்து பேசினார்கள். பின்னர் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் விஜய் சேதுபதியால் நேரில் வர முடியவில்லை.

காசோலை வழங்கிய பின்னர் ரசிக மன்றத்தினர் போனில் கோமதியுடன் விஜய்சேதுபதியை பேசவைத்துள்ளனர். அப்போது விஜய் சேதுபதி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். #GomathiMarimuthu #VijaySethupathi

SCROLL FOR NEXT