சினிமா

‘மெர்சல்’ வெற்றி: படக்குழுவுக்கு விருந்து வழங்கிய விஜய்

விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் மெர்சல் படத்தின் வெற்றிக்கு ‘மெர்சல்’ படக்குழுவுக்கு நடிகர் விஜய் விருந்து ஒன்றை வழங்கியிருக்கிறார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருகாகிய இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் கிளம்பியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இவ்வாறாக அனைத்து தடைகளையும் தாண்டி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ.130 கோடி செலவில் உருவாகிய இப்படம் தற்போது வரை ரூ.210 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதால், வசூல் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி' விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், நடிகர் விஜய் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு விருந்து ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள விஜய் வீட்டில் நடைபெற்ற இந்த விருந்தில், அட்லி, ஏ.ஆர்.ரஹஹ்மான், எஸ்.ஜே.சூர்யா, பாடலாசிரியர் விவேக், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT