சினிமா

விஜய் ஆண்டனியாக மாறிய விஜய் தேவரகொண்டா

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் விஜய் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டாவின் தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #NadigaiyarThilagam #VijayDeverakonda

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். 

சமந்தா பத்திரிகை நிருபராக நடிக்கிறார். மதுரவாணி என்ற கதபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா தோற்றம் சமீபத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில், விஜய் தேவரகொண்டாவின் தோற்றமும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் தேரகொண்டா, விஜய் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati #VijayDeverakonda

SCROLL FOR NEXT