சினிமா

தமிழில் அறிமுகமாகும் `அர்ஜுன் ரெட்டி' நாயகன் விஜய் தேவர்கொண்டா

விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் விஜய் தேவர்கொண்டா நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மாலை மலர்

‘அரிமா நம்பி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கினார். இரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கும் இந்த படத்தில், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரசிகர்களிடையேயும், வணீக ரீதியாகவும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதையடுத்து ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், அதனை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பதில் புதிர் வைத்திருந்தார் ஞானவேல் ராஜா. 

இந்த புதிருக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேர்கொண்டா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.