சினிமா

‘பைரவா’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடக்கம்

விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...

விஜய் நடித்துவரும் அவரது 60-வது படத்துக்கு ‘பைரவா’ என்ற தலைப்பு வைத்தாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘பைரவா’ படக்குழு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறது. சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காமெடி நடிகர் சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

SCROLL FOR NEXT