சினிமா

‘அண்ணாதுரை’ படத்தில் புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது நடிகராக வலம் வருகிறார். பாடகர், தயாரிப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி அடுத்ததாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு (Editing) பணிகளை விஜய் ஆண்டனியே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமுக இயக்குநர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி ஆசிரியர், குடிகாரர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT