சினிமா

அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க இருக்கிறார்.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.