சினிமா

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு சர்கார் என தலைப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். #Sarkar #HBDThalapathyVIJAY

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

முன்னதாக நேற்று இரவு முதல் விஜய் படத்திற்கு இதுதான் தலைப்பு என பல்வேறு தலைப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் இந்த படத்தில் பணக்காரராக நடித்திருப்பதாகவும், சமூகத்தின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் சமகால அரசியல் பற்றி படத்தில் அலசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay62 #HBDThalapathyVIJAY #Sarkar

SCROLL FOR NEXT