மைனா மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் விதார்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குரங்கு பொம்மை நல்ல விமர்சனங்களை பெற்றது. அவர் அடுத்து நடிக்கும் படம் வண்டி. பொல்லாதவன் பட பாணியில் ஒரு பைக்கை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.
இதில் விதார்த்துக்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். ரஷீத் பாலா இயக்கி இருக்கிறார். இந்த படம் பற்றி விதார்த் கூறும்போது, ‘வீரம்’ படத்தின் போது இந்த கதையை சொல்ல வந்தார்கள். ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குனர் ராதாமோகன் என் நடிப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்தப் படத்தில் நான் எடுத்த பயிற்சிதான்.
இந்த படத்தில் ஒரு பிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம். அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்துவிட வேண்டாம்” என்றார்.