சினிமா

விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'

செல்வ சேகரன் இயக்கத்தில் விக்ராந்த் - அர்த்தனா பினு நடிப்பில் `வெண்ணிலா கபடி குழு' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

மாலை மலர்

அதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இது `வெண்ணிலா கபடி குழு' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அர்த்தனா பினு நடிக்கிறார்.

கிஷோர், பசுபதி, அனுபமா குமார், சூரி, அப்புக்குட்டி, யோகி பாபு, ரவி மரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சுசீந்திரன் இப்படத்திற்கு கதை எழுத, செல்வ சேகரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாக நடிகர் விக்ராந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.