சினிமா

வெங்கட் சுப்பிரமணி மைக்டெஸ்டிங் 1...2...3

முருகேஷ் பாரதி இயக்கத்தில் ரோ‌ஷன் - ஹர்ஷிதா நடிப்பில் பொய் சொல்வதை தடுக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘வெங்கட் சுப்பிரமணி மைக்டெஸ்டிங் 1...2...3’ படத்தின் முன்னோட்டம்.

மாலை மலர்

ரோ‌ஷன் இந்த படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஹர்ஷிதா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், சரத் லோகிசத்வா, வம்சி கிருஷ்ணா, யார் கண்ணன், மாரிமுத்து, ஆர்.என்.ஆர். மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - ஜெ.ஸ்ரீதர், இசை - ஷ்யாம் நம்பூதிரி, முருகேஷ் பாரதி, படத்தொகுப்பு - டி.எஸ்.ஜெய், வசனம் - பி. வெங்கட சுந்தரம், கலை - எம்.ஜி. முருகன், நடனம் - ராதிகா, சண்டைபயிற்சி - ஆர். சக்தி சரவணன், தயாரிப்பாளர்கள் - ரோ‌ஷன், ஜி.ஸ்ரீநிவாசன், கதை, திரைக்கதை, இயக்கம் - முருகேஷ் பாரதி. இவர் இயக்குனர் ஹரியிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர்.

படம் பற்றி நாயகன் ரோ‌ஷன் கூறுகிறார்...

“பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள் ளேன். ஒரு கிராமத்தில் பிறந்து அரசியல் கூட் டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங் களுக்கு மைக் செட் போடும் போது சந்திக்கும் சில பிரச் சினைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கிறது. பிரதமர் மோடி முதல் , சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படம்பிடித்துள்ளோம்” என்றார்.